Please enable Javascript
Skip to main content

சிறந்த உணவை வழங்குவதன் மூலம் உங்கள் வணிகத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்

பணியாளர்களையும் வாடிக்கையாளர்களையும் கார்ப்பரேட் உணவுடன் உபசரிக்கவும். அலுவலகத்தில், தொலைதூரப் பணியாளர்களுக்கு உணவை வழங்க விரும்பினாலும் சரி அல்லது வாடிக்கையாளர் சந்திப்புகளுக்கு உணவை வழங்க விரும்பினாலும் சரி, உங்கள் வணிகத்திற்குத் தனிப்பயனாக்கக்கூடிய உணவு டெலிவரி செயல்முறையை எளிதாக அமைத்துக்கொள்ளலாம்.

வணிக உணவு எந்த சந்தர்ப்பத்திற்கும் சிறந்தது

உணவை வழங்குதல் என்பது பணியாளர்களுக்கு வெகுமதி அளிப்பதற்கும் வாடிக்கையாளர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்கும் ஒரு சிறந்த வழியாக இருக்கும்.

  • அலுவலகத்தில் உணவை வழங்குதல்

    பணியாளர்களுக்கு அலுவலகத்தில் மதிய உணவை வழங்குங்கள். பட்ஜெட் மற்றும் கொள்கைகளுக்கு உட்பட்டு சுவையான உணவைத் தேர்ந்தெடுக்க பணியாளர்களை அனுமதிக்கவும்.

  • வேலை நேரத்திற்குப் பிறகு உணவை வழங்குதல்

    உங்கள் பின்னிரவு நேரப் பணியாளர்களுக்குப் பிடித்தமான உணவுகளை வழங்கி அவர்களை ஊக்கத்துடன் வைத்திருங்கள். உணவுத் திட்டத்தின் மூலம் நேரம், நாள், பட்ஜெட் மற்றும் பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை அமையுங்கள் அல்லது பணியாளர்களுக்கு வவுச்சர்களை வழங்குங்கள்.

  • வீட்டிற்கே சென்று உணவை வழங்குதல்

    தொலைதூரப் பணியாளர்களுக்கு உதவித் தொகையை வழங்கிடுங்கள் அல்லது மெய்நிகர் நிகழ்வுப் பங்கேற்பாளர்களை ஊக்குவிக்க உணவு வவுச்சர்களை வழங்கிடுங்கள். இடம், நேரம் மற்றும் மேலும் பலவற்றின் அடிப்படையில் நீங்கள் விதிகளை அமைக்கலாம்.

  • பயணத்தின் போது உணவு வழங்குதல்

    பயணத்தை மேற்கொள்ளும் விற்பனைக் குழுவாக இருந்தாலும் சரி அல்லது வாடிக்கையாளர் தளங்களில் பணிபுரியும் பணியாளர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் எங்கு இருந்தாலும் அவர்களுக்குச் சிறந்த உணவு வழங்கப்படுவதை உறுதிசெய்ய நீங்கள் உணவுத் திட்டங்களை அமைக்கலாம்.

  • பணியாளருக்கு வெகுமதியாக உணவு

    உங்கள் குழுவினர் Uber Eats ஆப்பில் உணவுகளை நேரடியாக பெற, ஒரு வவுச்சர் அல்லது Uber பரிசு அட்டையை* அனுப்புவதன் மூலம் நீங்கள் அவர்களை மதிக்கிறீர்கள் என்பதைத் தெரியப்படுத்துங்கள்*.

1/5
1/3
1/2

பல வழிகளில் உணவை வழங்குவதற்கான கட்டுப்பாட்டை ஒரே தளம் உங்களுக்கு வழங்குகிறது

நீங்கள் பணியாளர்களுக்கு மாதாந்திர உணவு உதவித் தொகையை வழங்க விரும்பினாலும் சரி அல்லது ஒருமுறை உணவிற்கான செலவை வழங்க விரும்பினாலும் சரி, எங்களின் வசதியான தீர்வுகள் அந்தச் செலவுகளை ஈடுசெய்ய உங்களுக்கு உதவும்.

உணவுத் திட்டமிடல்

உங்கள் முழு குழுவிற்கும் அலுவலக உணவைத் தன்னியக்க முறையில் வழங்கவும். தொடர்ச்சியான குழு ஆர்டர்களைத் திட்டமிடவும், தினசரி நினைவூட்டல்கள் மூலம் உங்கள் பணியாளர்கள் தங்களுக்குப் பிடித்த விருப்பங்களைச் சேர்க்கவும் UberEats.com-இல் உள்ள உணவுத் திட்டமிடல் அம்சத்தைப் பயன்படுத்தவும்.

உங்கள் முழு குழுவிற்கும் அலுவலக உணவைத் தன்னியக்க முறையில் வழங்கவும். தொடர்ச்சியான குழு ஆர்டர்களைத் திட்டமிடவும், தினசரி நினைவூட்டல்கள் மூலம் உங்கள் பணியாளர்கள் தங்களுக்குப் பிடித்த விருப்பங்களைச் சேர்க்கவும் UberEats.com-இல் உள்ள உணவுத் திட்டமிடல் அம்சத்தைப் பயன்படுத்தவும்.

ஆரம்பம் முதல் இறுதி வரை தடையற்ற ஆர்டர் அனுபவம்

  • உலகளாவிய உணவகத் தேர்வு

    உலகம் முழுவதும் Uber Eats-இல் கிடைக்கும் 825,000-க்கும் மேற்பட்ட மெர்ச்சன்ட் பார்ட்னர்களில் உங்கள் நகரத்தில் கிடைப்பதிலிருந்து தேர்வு செய்யுங்கள்.

  • பல்வேறு வகையான உணவு விருப்பங்கள்

    சைவ உணவுகள், க்ளுட்டன் இல்லாத உணவுகள் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் மற்றும் உணவு விருப்பங்களிலிருந்து தேர்வு செய்யுங்கள்.

  • வசதியான தேடல் வடிப்பான்கள்

    உங்களுக்குத் தேவையானதைத் துல்லியமாகக் கண்டறிய, உணவு வகைகள், டெலிவரி நேரம், தரமதிப்பீடு, விலை மற்றும் மேலும் பலவற்றின் அடிப்படையில் வடிகட்டுங்கள்.

1/3
1/2
1/1

ஏன் Uber for Business-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்? இந்தத் தளத்திலேயே அதற்கான ஆதாரம் உள்ளது

உலகளவில் கிடைக்கிறது

Uber for Business ஆனது 32 நாடுகளில் உள்ள 6,000-க்கும் மேற்பட்ட நகரங்களில் கிடைக்கிறது, நீங்கள் வளர்ந்து வரும் நிறுவனமாக இருந்தாலும் சரி அல்லது தற்போது சர்வதேச அளவில் அலுவலகங்களைக் கொண்டிருந்தாலும் சரி, உங்கள் பணியாளர்களுக்கான உணவுத் தீர்வுகளை வழங்குவதை இது எளிதாக்குகிறது.

உணவு மற்றும் பயணங்களுக்கான ஒரே தளம்

பணியாளர்களுக்கான பயணங்கள் மற்றும் உணவுகளை ஒரே சிறந்த தளம் மூலம் எளிதாக நிர்வகிக்கலாம் மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பில்லிங் அமைப்புகள், விற்பனையாளர் இன்வாய்ஸ்கள் மேலும் பலவற்றைக் கையாள்வதில் ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கலாம்.

நிலைத்தன்மையின் மீது கவனம் கொண்டுள்ளது

உமிழ்வைக் குறைப்பதற்கான மல்டிமாடல் டெலிவரி, பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்காகப் பாத்திரத்தைத் தேர்வு செய்தல் அல்லது செயல்திறனை மேம்படுத்த குழுவாக ஆர்டர்களைச் செய்தல் என எந்த அம்சமாக இருந்தாலும், நாங்கள் நிலைத்தன்மையை மனதில் கொண்டே செயல்பட்டு வருகிறோம்.

சேமிப்பதற்கான கூடுதல் வழிகள்

உணவுத் திட்டங்களில் செலவு வரம்புகளை அமையுங்கள் அல்லது வவுச்சர்களை வழங்குங்கள் (பயன்படுத்தப்பட்ட தொகைக்கு மட்டுமே நீங்கள் பணம் செலுத்துவீர்கள்). மேலும், மொத்தமாக ஆர்டர் செய்வதைத் தவிர்க்க குழுவின் அளவைப் பொறுத்து ஆர்டர் செய்யுங்கள். மேலும், கூடுதல் சலுகைகளைப் பெற Uber One-இல் பதிவு செய்யுங்கள்.

சிறந்த உணவை வழங்குவதன் மூலம் உங்கள் வணிகத்தை வளர்த்திடத் தொடங்குங்கள்

"ஒரு கார்ப்பரேட் கார்டைச் சேர்ப்பது பணியாளர்களுக்கு மட்டுமல்ல, செலவுகளை அங்கீகரிப்பவர்களுக்கும் மிகப்பெரிய நிவாரணமாக இருந்தது."

சுசன்னா ஹோடர், பணியிட மேலாளர், BetterHelp

கூடுதல் ஆதார வளங்களை ஆராயுங்கள்

அலவலகத்திலோ அல்லது வீட்டிலோ Uber Eats உடன் குழுவாக ஆர்டர் செய்தல், தோழமையுணர்ச்சியைத் திரும்பக் கொண்டுவர எப்படி உதவுகின்றன என்பதைப் பாருங்கள்.

பணியாளர்கள் புத்துணர்ச்சிப் பெறவும் அவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கவும் 'ஒரு நேரத்தில் ஒரு உணவு' போன்ற உணவு திட்டங்கள் எவ்வாறு உதவுகின்றன என்பதைக் கண்டறியுங்கள்.

Uber One உறுப்பினருரிமை உங்கள் வணிகத்திற்கும் பணியாளர்களுக்கும் சேமிப்பையும் மற்றும் உறுப்பினர்களுக்கு மட்டுமே கிடைக்கும் சலுகைகளையும் எவ்வாறு வழங்குகிறது என்பது குறித்துப் படியுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  • உங்கள் அலுவலகத்திற்கு உணவு டெலிவரி செய்வதற்கான விருப்பத்தேர்வுகளில் குழு மதிய உணவிற்கான குழு ஆர்டர் அல்லது செலவு செய்தல் வரம்புகள் மற்றும் அமைவிட கட்டுப்பாடுகளைக் கொண்ட உணவுத் திட்டம் ஆகியவை அடங்கும், இதனால் பணியாளர்கள் அவர்களாகவே Uber Eats-இலிருந்து ஆர்டர் செய்துகொள்ளலாம்.

  • Uber for Business தளத்தில் இலவசமாகப் பதிவுசெய்யலாம். Uber Eats-இல் உணவு ஆர்டர்களை வழங்குவது தொடர்பான செலவுகளுக்காக எப்போதும் போல் உங்கள் நிறுவனத்திற்குக் கட்டணம் விதிக்கப்படும்.

    Uber for Business டேஷ்போர்டை அணுகபதிவு செய்து இன்றே தொடங்கலாம். பதிவு செய்வதற்கு, உங்கள் பணி மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்த்து, கணக்கு அமைவை நிறைவு செய்ய பேமெண்ட் முறையைச் சேர்க்க வேண்டும் (கவலை வேண்டாம்—உங்களிடம் இதற்காகக் கட்டணம் வசூலிக்கப்படாது).

    உங்கள் வணிகம் 500-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டிருந்தால், கூடுதல் தனிப்பயன் தேவைகளுக்கான அமைவை நிறைவு செய்வதில் உதவி பெறுவதற்காக நீங்களும் எங்களது விற்பனைக் குழுவைத் தொடர்பு கொள்ளலாம்.

  • நேரம், நாள், பொருளுக்கான கட்டுப்பாடுகள், செலவு வரம்புகள், இருப்பிடம் மற்றும் மேலும் பலவற்றிற்கான பயன்பாட்டு விதிகளை அமைப்பதன் மூலம் உங்கள் வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உணவுத் திட்டத்தைத் தனிப்பயனாக்கலாம். இங்கே மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

  • ஆம். Uber for Business டாஷ்போர்டு வழியாக வரும் உணவு திட்டங்கள் மிகவும் தனிப்பயனாக்கக்கூடியவை. அமைவிடம் மற்றும் செலவு செய்தல் வரம்பிற்குத் தனிப்பயனாக்கத் தேவையான பல திட்டங்களை நீங்கள் உருவாக்கலாம்.

  • எந்த அளவிலான வணிகமும் Uber Eats உணவு டெலிவரி சேவையைத் தங்கள் அலுவலகத்திற்குப் பயன்படுத்தலாம்.

  • குழுவாக ஆர்டர் செய்தலைத் தொடங்க, உணவகத்தைத் தேர்ந்தெடுத்த பின் குழு ஆர்டர் பொத்தானைத் தட்டவும். உங்கள் அமைப்புகளைத் தனிப்பயனாக்குங்கள், பங்கேற்பாளர்களைச் சேருங்கள், ஆர்டரைச் செய்திடுங்கள். மேலும் தெரிந்துகொள்ள, இந்தப் பக்கத்தை பாருங்கள்.

  • நீங்கள் Uber for Business வாடிக்கையாளராக இருந்தால், நீங்களும் மற்றும் உங்கள் அனைத்து பணியாளர்களும் உயர் தரமதிப்பீடு பெற்ற பிரீமியம் ஆதரவு முகவர்களுக்கான அணுகலைப் பெறலாம். இந்தச் சேவை 24/7 மணிநேரமும் உங்களுக்குக் கிடைக்கும். நேரடி அரட்டை அல்லது ஆப் ஆதரவு மூலம் ஆதரவைத் தொடர்பு கொள்ளலாம். அமெரிக்காவில், 800-253-9377 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் தொலைப்பேசி ஆதரவைப் பெறலாம்.

  • நிலைத்தன்மை அளவீடுகளை மேம்படுத்த, Uber பல முன்முயற்சிகளைக் மேற்கொண்டுவருகிறது, பின்வருபவை உட்பட:

    • மல்டிமாடல் டெலிவரி: நடந்து சென்று டெலிவரி செய்ய அல்லது பைக்குகள், ஸ்கூட்டர்கள் அல்லது மின்சார வாகனங்கள் மூலம் சென்று டெலிவரி செய்யத் தேர்வு செய்வதற்கான விருப்பத்தேர்வுக் கூரியர்களுக்கு உள்ளது. பல்வேறு பார்ட்னர்ஷிப் மூலம், கூரியர்கள் கார்பன் உமிழ்வு இல்லாத வாகனங்களை அணுகுவதை Uber எளிதாக்குகிறது.

    • குழுவாக ஆர்டர் செய்தல்: ஒரே உணவகத்தில் இருந்து ஆர்டர் செய்துக் கூரியர் செலவைப் பகிர்ந்து கொள்ள, Uber Eats பயனர்கள் நண்பர்கள் அல்லது சக ஊழியர்களுடன் சேர்ந்து குழுவாக ஆர்டர்களைச் செய்யலாம். இணைக்கப்பட்ட ஆர்டர்கள் செயல்திறனை மேம்படுத்துவதோடு தேவையற்ற மற்றொரு பயணத்தையும் மற்றும் அந்தப் பயணத்தால் ஏற்படும் கார்பன் உமிழ்வையும் குறைக்கிறது.

    • உணவிற்கான பாத்திரங்களைத் தேர்வு செய்தல்: பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்காக, Uber Eats பயனர்கள் பாத்திரங்கள் மற்றும் ஸ்ட்ராக்களைக் கட்டாயம் அவர்களேதான் கோர வேண்டும், ஏனென்றால் இவை இனி உணவு ஆர்டர்களில் தானாகச் சேர்க்கப்படாது.

    • அருகாமையில் உள்ள பிக்கப் இடங்கள்: வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்களை நேரில் நடந்து சென்று பிக்அப் செய்துகொள்ளக்கூடிய அருகாமையில் உள்ள உணவகங்களின் பரந்த தேர்வைக் கொண்ட பிக்கப் வரைபடத்தை Uber Eats காட்டுகிறது.

*அமெரிக்க டாலர்களில் பரிசு அட்டைகள் The Bancorp Bank, N.A.-ஆல் வழங்கப்படுகின்றன