Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

இந்தியாவில் வாகனங்களுக்கான வாகனத் தேவைகள்

உங்களுக்கு எந்தக் கார் சரியானது? உங்கள் நகரத்தில் Uber-இன் கார் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிசெய்து கொள்ளுங்கள். மேலும், உங்கள் செலவுகளைக் குறைவாக வைத்திருந்தால் அதிகமாகப் பணம் சம்பாதிப்பீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் வாகனத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டியவை

  • மஞ்சள் தகடு கொண்ட வாகனம்
  • 2010 ஆம் ஆண்டு அல்லது அதற்குப் பிந்தைய கார் மாடல்
  • 4-கதவு ஹேட்ச்பேக், செடான், SUV அல்லது மினிவேன்
  • வாகனத்தின் கட்டமைப்பு அல்லது செயல்பாட்டில் எந்த பாதிப்புகளும் இல்லாத நல்ல நிலையில் இருக்க வேண்டும்

பதிவுச் சான்றிதழ்

உங்கள் தற்போதைய பதிவு ஆவணத்தின் நகல் எங்களுக்குத் தேவை. அதில் உள்ள அனைத்துத் தகவலும் தெளிவாகத் தெரியும் படி இருக்க வேண்டும். வாகனம் வேறொருவரின் பெயரில் இருந்தால், எங்களுக்கு NOC/அஃபிடவிட் தேவை

காப்பீடு

உங்கள் தற்போதைய காப்பீட்டுக் கொள்கையின் நகல் எங்களுக்குத் தேவை. அதில் உள்ள அனைத்துத் தகவலும் தெளிவாகத் தெரியும் படி இருக்க வேண்டும்.

சுற்றுலா அனுமதி

உங்களின் தற்போதைய சுற்றுலா அனுமதியின் நகல் எங்களுக்குத் தேவை. அதில் உள்ள அனைத்துத் தகவலும் தெளிவாகத் தெரியும் படி இருக்க வேண்டும்.

தகுதிபெறும் வாகனங்களின் பட்டியல்

உங்கள் நகரத்தில் Uber உடன் ஓட்டுவதற்குத் தகுதியான வாகன பிராண்டுகளையும் மாடல்களையும் கண்டறியவும்.

இந்தியாவில் உள்ள வாகன விருப்பத்தேர்வுகள்

  • பெரும்பாலான புதிய செடான் கார்கள் UberX உடன் வாகனம் ஓட்டத் தகுதி பெறும்.

    கூடுதல் தேவைகள்

    • நல்ல நிலையில் உள்ள 4-கதவு செடான்
    • ஓட்டுநரைத் தவிர, குறைந்தது 4 பயணிகளாவது அமரும் படி இருக்க வேண்டும்
    • வேலை செய்யும் ஜன்னல்கள் மற்றும் ஏர் கண்டிஷனிங் இருக்க வேண்டும்
    • 2010 ஆம் ஆண்டு அல்லது அதற்குப் பிந்தைய கார் மாடல்கள் ஆகியவை UberX உடன் வாகனம் ஓட்டத் தகுதிபெறும். எங்கள் பிரபலமான மாடல்களின் பட்டியலைக் காண்க, ஆனால் பிற மாடல்களும் தகுதி பெறக்கூடும்.
  • அதிக திறன் கொண்ட உங்கள் வாகனத்தில்—கூடுதல் பயணிகளை அமரவைத்து—அதிகக் கட்டணங்களைப் பெறுங்கள்.

    கூடுதல் தேவைகள்

    • 4-கதவு SUV அல்லது தனித்தனியாகத் திறக்கும் கதவுகளைக் கொண்ட மினிவேன்
    • ஓட்டுநரைத் தவிர, குறைந்தது 6 பயணிகளாவது அமரும் படி இருக்க வேண்டும்
    • வேலை செய்யும் ஜன்னல்கள் மற்றும் ஏர் கண்டிஷனிங் இருக்க வேண்டும்
    • 2013 ஆம் ஆண்டு அல்லது அதற்குப் பிந்தைய பெரும்பாலான SUV மாடல்கள் UberXL உடன் வாகனம் ஓட்டத் தகுதிபெறும். எங்கள் பிரபலமான மாடல்களின் பட்டியலைக் காண்க, ஆனால் பிற மாடல்களும் தகுதி பெறக்கூடும்.

வாகனத் தீர்வுகள்

நீங்கள் எப்படி ஓட்டத் திட்டமிட்டிருந்தாலும், உங்களுக்கு ஏற்ற சரியான காரைக் கண்டறிய நாங்கள் உங்களுக்கு உதவுவோம். உங்களுக்கு கிடைக்கக்கூடிய விருப்பங்களைக் கண்டறியவும்.

Uber-இலிருந்து மேலும் பலவற்றைப் பெறுங்கள்

  • உதவி பெறுங்கள்

    ஒவ்வொரு Uber பயணத்தையும் சிரமமற்றதாக மாற்றுவோம். உங்கள் கணக்கை அமைக்கவும், ஆப்பைப் பயன்படுத்தத் தொடங்கவும், கட்டணங்களைச் சரிசெய்யவும் மேலும் பலவற்றிலும் உங்களுக்கு உதவ எங்கள் ஆதரவு பக்கங்கள் உள்ளன.

  • Uber-ஐத் தொடர்புகொள்கொள்க

    கேள்விகள் உள்ளனவா? பதில்களைப் பெறுங்கள். உங்கள் நகரத்தில் உள்ள Uber சேவை மையத்தில் தனிப்பட்ட ஆதரவைப் பெறுங்கள்.

  • ஃப்ளீட்டைக் கண்டறியவும்

    நீங்கள் Uber ஆப்-ஐப் பயன்படுத்தி வாகனம் ஓட்ட விரும்பினால், உள்ளூர் ஒழுங்குமுறைத் தேவைகளின்படி உரிமம் பெற்ற ஃப்ளீட் நிறுவனத்துடன் இணைக்கப்பட, இங்கே பட்டியலிடப்பட்டுள்ள சில ஃப்ளீட்களைத் தொடர்புக்கொள்ளவும்.

  • வெகுமதிகள்

    உங்கள் செலவுகளைக் குறைத்து, Uber பார்ட்னர்களிடமிருந்து ஓட்டுநருக்கானாச் சலுகைகள் மற்றும் வெகுமதிகள் மூலம் உங்கள் நகரத்தில் அதிகமாகச் சம்பாதித்து வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள்.

  • பார்ட்னர் பாதுகாப்பு

    விபத்துக்கள் அல்லது வாழ்க்கையில் ஏற்படும் முக்கியமான மாற்றங்கள் தொடர்பான செலவுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்க பார்ட்னர் பாதுகாப்பு உதவுகிறது. மேலும், தகுதியான அனைத்து சுயாதீன ஓட்டுநர் பார்ட்னர்களுக்கும் கட்டணமின்றி வழங்கப்படுகிறது.

1/5
1/3
1/2

இந்த இணையப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் தகவல் அறியும் நோக்கங்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன, அவை உங்கள் நாடு, பிராந்தியம் அல்லது நகரத்திற்குப் பொருந்தாமலும் கூட இருக்கலாம். இது மாற்றத்திற்கு உட்பட்டது மற்றும் அறிவிப்பு இல்லாமல் புதுப்பிக்கப்படலாம்.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو