சரியானவற்றையே செய்ய வேண்டும். வேறொன்றும் தேவையில்லை.
"நாம் என்ன சாதிக்கப் போகிறோம் என்பதை விட, எவ்வாறு வெற்றியடையப் போகிறோம் என்பதை நினைவில்கொள்வது அவசியம். மேலும் நமது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை நடத்தையும் நாம் அடையும் வெற்றிக்கு நிகராக முக்கியத்துவம் பெறுகின்றன. Uber பணியாளர்கள் அனைவரும் குறிப்பிட்ட சில பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் எப்போதும் உயர்ந்த நேர்மைத்தன்மையை வெளிப்படுத்துவார்கள் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”
டோனி வெஸ்ட், தலைமைச் சட்ட அதிகாரி, Uber
நெறிமுறைகள் மற்றும் நேர்மைத்தன்மை
Uber-இன் நெறிமுறைகள் & இணக்கக் குழுவின் நோக்கம் (E&C) Uber-இன் வெற்றியை எளிதாக்குவதும் அனைத்துப் பணியாளர்களின் நடத்தைக்கும் வழிகாட்டும் நம்பகமான வணிகப் பார்ட்னராகப் பணியாற்றுவதுமே ஆகும். இதை நாங்கள் செயல்படுத்த:
- நெறிமுறையுடன் முடிவெடுக்கும் கலாச்சாரத்தை வளர்த்துச் செயல்படுத்துகிறோம்
- பொருந்தக்கூடிய அனைத்துச் சட்டங்கள், கொள்கைகள் மற்றும் விதிமுறைகளுக் கு இணங்கும்படி Uber பணியாளர்களுக்கு வழிகாட்டுகிறோம்
இணக்க சாம்பியன் சாதனை பேட்ஜ்
சுயாதீனமாகச் சரிபார்க்கப்பட்டது
ஸ்காட்39 தலைமையின் கீழ், Uber விரும்பத்தக்க இணக்கத் தலைவர் சரிபார்ப்பைப் பெற்றுள்ளது.
உயரிய நோக்கத்துடனான திட்டங்கள்
ஏதேனும் சட்டவிரோதமான, நெறிமுறையற்ற அல்லது Uber-இன் கொள்கைகளை மீறும் நடத்தைகளைத் தடுப்பதற்கும், கண்டறிவதற்கும், பதிலளிப்பதற்கும் வழிவகை செய்யும் விரிவான திட்டங்களைத் தொடர்ச்சியாக வக ுத்துப் பராமரிக்க Uber-இன் சட்ட அமைப்புடன் எங்களின் நெறிமுறைகள்& இணக்கக் குழு ஒன்றிணைந்து செயல்படுகிறது.
மூன்றாம் தரப்பினருடனும் அரசாங்க அதிகாரிகளுடனும் சட்டப்பூர்வமாக ஈடுபடுங்கள்.
தொழில்முறைக் கடமைகளில் தனிப்பட்ட விருப்ப வெறுப்புகள் தலையிடக்கூடிய சூழ்நிலைகளைத் தவிர்த்தல்.
பொது அதிகாரிகளுடன் உரையாடும்போது ஈடுபாட்டிற்கான விதிகளுக்கு இணங்குதல்.
மத்திய மற்றும் மாநிலச் சட்டங்களுக்கும் ஒப்பந்தக் கடமைகளுக்கும் இணங்க உதவுதல்.
சப்ளையர்கள் மற்றும் மூன்றாம் தரப்பினருக்கு நேர்மைத்தன்மையைக் கற்பித்து மற்றும் மதிப்பீடு செய்தல்.